Malaysia

ஈப்போ கிந்தா இந்திய கலைஞர்கள் ஆர்வலர் சங்கம் கோப்பெங் இந்து சங்கம் இணைந்து நடத்திய இளையோர் விருதளிப்பு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பு

ஈப்போ,மே 5-
ஒருவரின் வாழ்வில் பல முன்னேற்றங்களை அடைவதற்கு‌ பெரும் உந்துதலாக இருக்கக் கூடிய விஷயம் விருது என்றால் அது உண்மைதான். அதிலும் பதின்ம வயதில் இருக்கக்கூடிய 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு தன்முனைப்பு , விருதுகள் அவர்கள் அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல‌ பெரும் உந்துதலா இருக்கும்.

அந்த வகையில் ஈப்போவில் பல கலை துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பாராட்டு செய்யும் வகையில் ஈப்போ கிந்தா இந்திய கலைஞர்கள் ஆர்வாலர் சங்கம் அண்மையில் விருதளிப்பு நிகழ்வினை கிந்தா இந்தியர் சங்க‌ மண்டபத்தில் நடத்தினர்.

மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகள் விருது பெறுவதை கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தனர்

இந்த சிறப்பான விருது விழாவினை ஈப்போ கிந்தா இந்தியர் கலைஞர்ள் ஆர்வாலர் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.கன்னிரசு, அச்சங்கத்தின் கோப்பிங் கிளை தலைவர் வோய்.கே. சசிராவ், கோப்பிங் இந்து சங்கத்தின் வட்டாரத்தின் தலைவர் விவேக‌ரத்னா சரஸ்வதி ஆகியோர் முன்னேடுத்து ஏற்பாடு செய்தனர்.

இந்த விழாவில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன், ஈப்போ கிந்தா கலை கலாச்சார பண்பாட்டு சங்கத்தின் தலைவர் பி.யுவராஜ், டத்தோ ஷர்மா உட்பட பல துறைகளை சேர்ந்த ஆசிரியர்கள் சிறப்பு வருகை புரிந்தனர்.

வருகையாளர்களுக்கு சுவையான உணவு வழங்கப்பட பரதம், கராத்தே, தய்குவாண்டோ, சங்கீதம், தப்பு மேளம் உட்பட பல துறைகளை சேர்ந்த மாணவர்களுக்கு விருதுகளை சசிராவ், கன்னிரசு, சரஸ்வதி அம்மையார் எடுத்து வழங்கினர்.

இதனிடையே, கல்வியில் சிறப்பாக விளங்கும் மாணவர்களுக்கு அடிக்கடி அங்கீகாரம் கிடைக்கிறது.‌ஆனால் கலைத் துறைகளில் மாணவர்களுக்கு அங்கீகாரம் குறைவாகும். அக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த‌ விருதளிப்பு அமையும் என‌ சசிராவ் கூறினார்.

மேலும் கலை துறைகளில் சாதனை‌ படைத்த மாணவர்களுக்கு‌ விருதளிப்பு விழா நடைப்பெற ஆதரவு அளித்த அனைவருக்கும் அவர் நன்றியை பதிவு செய்தார்.

இந்த விழாவில் 186 மாணவர்கள் விருதுகளை பெற்று குடும்பத்திற்கு பெருமை சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button