
Malaysia
தீபாவளி கடைக்கள் அகற்றப்பட்ட விவகாரம் தீர்வு காண்பேன்! பத்து எம்.பி. பிரபாகரன் அறிவிப்பு
கோலாலம்பூர்,அக்.18-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் அமைக்கப்பட்ட சில கடைகளை முறையான பெர்மிட் இல்லாததால் டிபிகேஎல் அகற்றி உள்ளது.
இந்த கடைகளை டிபிகேஎல் அகற்றியதால் அதன் உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இப்பகுதிக்கு வருகை மேற்கொண்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கடைக்காரர்களை சந்தித்து பேசினார்.

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத நிலையில் இந்த கடைகள் மீண்டும் அமைக்க டிபிகேஎலுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பேன். அதுவரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்று பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.



