
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் சில தீபாவளி கடைகள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது
கோலாலம்பூர்,அக்.18-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள் சில கடைகளை டிபிகேஎல் அகற்றியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அமலாக்க பிரிவின் அதிகாரிகள் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவுக்கு வந்து அந்த கடைகளை அகற்றினர். போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் தீபாவளி கலை விழா நடத்த மேடையை அமைக்கும் பொருட்டு இந்த கடைகள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கடைகளை அமைத்து இரண்டு வாரமாக இவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கடைகள் அகற்றப்பட்டதால் அதன் உரிமையாளர்கள் பொங்கி எழுந்து தங்களின் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்தனர்.
கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக எங்கள் கடைகளை அகற்றி வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.




