
மலேசிய இந்திய சமூக மடானி WHATSAPP புலனம் சேனல் அறிமுகம் தகவல் தொடர்பு அமைச்சின் கீழ் செயல்படும் அமைச்சின் அதிகாரி டத்தோ சிவபாலன் தகவல்
கோலாலம்பூர்,அக்.18-
மலேசிய இந்திய சமூக மடானி WHATSAPP புலனம் சேனல் ஒன்று
தகவல் தொடர்பு அமைச்சின் இந்திய சமூக நலன் நடவடிக்கை குழுவினரால் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மூத்த அதிகாரி டத்தோ சிவபாலன் கூறினார்.
தகவல், தொடர்பு அமைச்சின் ஒளிபரப்பு துறை நிர்வாகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த இந்திய சமூக வாட்ஸ்ஆப் புலன சேனலில் பெர்னாமா, ஆர்.டி.எம், தகவல் துறை, தொடர்பு சமூக துறை, ஃபினாஸ் எனப்படும் மலேசிய திரைப்பட தணிக்கை வாரியம் மற்றும் எம்சிஎம்சி எனும் மலேசிய பல்லூடக ஆணையம் ஆகியவவற்றின் உறுப்பினர்கள் உறுப்பியம் பெற்றுள்ள இப்புலன சேனல் தகவல் தொடர்பு அமைச்சின் ஒலிபரப்புத் துறையால் நிர்வகிக்கப்படுவதாக டத்தோ சிவபாலன் தெரிவித்தார்.
மலேசிய அரசாங்கத்தின் கொள்கைகள், சிக்கல்கள், திட்டங்கள் உட்பட இந்திய சமூகத்திற்கான தகவல்களைப் பரப்புவதற்கான பொறுப்பை அந்த வாட்ஸ்ஆப் புலன சேனல் கொண்டுள்ளது.
இந்த வாட்ஸ்ஆப் புலனத்தில் இணைய விரும்பும் மக்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் இந்த WhatsApp சேனலை பின்தொடரலாம். இதில் குறிப்பாக இந்திய சமூகத்திற்கான அரசாங்க முயற்சிகள், திட்டங்கள் பற்றிய தகவல்களை விரைந்து இந்த வாட்ஸ்ஆப் சேனலில் பெறலாம் என்று தகவல் தொடர்பு அமைச்சின் மூத்த அதிகாரி டத்தோ சிவபாலன் மேலும் சொன்னார்.



