
இந்திய சமுதாயத்தின் உன்னத தலைவர்… முற்போக்கு சிந்தனையாளர்… அடுத்த தலைமுறைக்கு அடித்தளம் அமைத்தவர் திங்கட்கிழமை பிறந்தநாள் காணும் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்கள் நீடு வாழ வாழ்த்துவோம்
இந்திய சமுதாயத்தின் உன்னத தலைவர்…
முற்போக்கு சிந்தனையாளர்…
அடுத்த தலைமுறைக்கு அடித்தளம் அமைத்தவர்
திங்கட்கிழமை பிறந்தநாள் காணும் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்கள் நீடு வாழ வாழ்த்துவோம்
கோலாலம்பூர்,டிச.15-
இந்திய சமுதாயத்தின் நலன்காக்கும் தலைவராக பார்க்கப்படும் ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இந்திய சமுதாயத்தின் உன்னத தலைவராக கருதப்படுகிறார்.
இந்த மக்கள் தலைவருக்கு இன்று டிசம்பர் 16ஆம் தேதி பிறந்தநாள். இன்று பிறந்தநாள் காணும் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்கள் நீடு வாழ தேசம் ஊடகத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.
எம்.சன்னாசி-ருக்குமணி தம்பதியர் பெற்றெடுத்த முத்துரத்தினம் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் 30 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை வழியில் அரசியலில் சாதாரண தொண்டரான களமிறங்கினார்.
வேகம் விவேகத்தோடு துடிப்புமிக்க இளைஞராக ம.இ.காவில் தன்னை இணைத்துக் கொண்டார். ம.இ.காவின் அடிமட்ட உறுப்பினராக செயல்பட்டு இளைஞரணி தலைவரானார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற செயலாளர் ஆனார். இவரது ஆற்றல் இவரை உச்சிக்கு கொண்டு சென்றது. ஆம், செனட்டராகி மேலவை தலைவர் ஆனார்
ம.இ.காவின் தலைமகன்-தங்கமகன் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
மக்கள் மனதில் இடம்பிடித்ததால் மக்கள் தலைவராக மேலவையில் உயரத்தில் அமர்ந்தார்… ஏழை மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளலாவார்…
உங்களிடம் உதவி நாடி வந்தவர்களிடம் நின்று பேசி நம்பிக்கையை விதைத்த மாபெரும் தலைவர் நீங்கள்…
MIED வழி இலவச கல்வி வழங்கியவர் நீங்கள்…
லட்சக்கணக்கில் மருத்துவ நிதி வழங்கியவர் நீங்கள்…
கோவிட் காலத்தில் தமிழ்நாட்டில் தத்தளித்தவர்களை தனி விமானங்களில் கொண்டு வந்தவர் நீங்கள்…
இந்திய பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கியவர் நீங்கள்…
பொருளாதார பிரச்சினையில் சிக்கியவர்களை மீட்டவர் நீங்கள்…
கலைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் கலைத்தந்தை நீங்கள்…
இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை தன் பிரச்சினையாக கருதி தீர்வு கண்ட செயல்வீரர் நீங்கள்…
இந்த தேச இந்திய சமுதாயத்தின் இதயக்கனி நீங்கள்…
ஒன்றாக கைகோர்ப்போம்…
மீண்டும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்…
அன்புடன் குணாளன் மணியம்
தேசம் குடும்பத்தினர்.



