Malaysia

மருத்துவர்‌ துறையில் இளங்கலை பட்டம் பெற்ற‌ பரமேஸ்வரி‌ கே.என். வையாபுரி

ஜோகூர்,டிச.
படிப்பதற்கு பணம் இல்லை அதனால் பணம் சேர்த்து விட்டு பிறகு நான் படிக்கிறேன் என்று மேற்கல்வி தொடராமல் இருக்கும் மாணவர்கள் பலர்.

ஆனால் பணம் ஒரு தங்கு தடையாக இருக்கவே கூடாது என்று தம்மால் முடிந்தவரை வேலை செய்து பரமேஸ்வரி கே.என்.வையாபுரி மருத்துவ‌ துறையில்‌ மேற்கல்வியை படிக்கத் தொடங்கினார்.

பின்னர்‌ படிப்பிற்கான‌ செலவினங்களை கவனித்து கொண்டு மருத்துவ‌ துறையில் இளங்கலை‌ பட்டம் பெற்றார்.

எம்.எஸ்.யு. பெங்களுர் ,இந்தியாவில்‌ தன்னுடைய‌ மருத்துவ துறையை‌ நிறைவு செய்து குடும்பத்திற்கு‌ பெருமை‌ சேர்த்துள்ளார்.

கெடா, மாலாவ் , பெலாம் தோட்டத்தில் பிறந்த பரமேஸ்வரிக்கு பெற்றோர்கள் கே.என்.வையாபுரி, சரோஜா, சிற்றப்பா டத்தோ நிலா ராஜா, சித்தி டத்தின் இந்திராணி உறுத்துணையாக இருந்தனர்.

லாடாங் ரிணி தமிழ்ப்பள்ளியில் படித்த பரமேஸ்வரி தம்முடைய‌ படிப்பு நிறைவு‌ செய்ய வேண்டும் என்பதற்காக‌ பல‌ இன்னல்களை சமாளித்தார்.

முடிந்தவரை‌ குடும்பத்தினரை‌ சிரம்ப்படுத்த கூடாது என்று பரமேஸ்வரி செய்தியாளரிடம் கூறினார்.

மேலும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்வது தம்முடைய லட்சியம்‌ என்றார்.

நினைத்ததை முடிக்க வேண்டும்‌ என்ற‌ கொள்கையே பரமேஸ்வரியின் வேதமாகும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button