
நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன், அரச மலாய் ராணுவ முகாம் தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புங்கள்-ராகா அறிவிப்பாளர் கவிமாறன்
போர்ட்டிக்சன்,பிப்.8-
நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன், அரச மலாய் ராணுவ முகாமில் பல ஆண்டு காலமாக ஒரு தமிழ்ப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பலாம் என்று ராகா அறிவிப்பாளர் கவிமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரச மலாய் ராணுவ முகாமில் பல ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் இந்த தமிழ்ப்பள்ளியில் அனைத்து வசதிகளும் உள்ளன. இப்பள்ளியில் தரமான வசதிகளோடு மாணவர்கள் தமிழ்க் கல்வி கற்று வருகிறார்கள். இப்பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றார்கள்.
இவர்களுக்கு உணவு, உடை மட்டுமின்றி கல்வி மேம்பாட்டிற்கானபல பொருட்களும் இலவசமாகவே வழங்கப்படுகிறது ராணுவ பாதுகாப்புடன் பள்ளிக்கூடம் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்று பள்ளியின் வாரிய உறுப்பினர் திரு.கலை தெரிவித்தார்.

கலையின் ஏற்பாட்டில் அங்கு செல்லக்கூடிய ஒரு வாய்ப்பு தனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதாகவும் இந்த இடத்திற்கு பக்கத்தில் இருக்கக்கூடியவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க தாராளமாக இப்பள்ளிக்கு அனுப்பலாம் என்றும் அடுத்த மாதம் ஒன்றாம் ஆண்டு பதிவு தற்போது நடைபெற்று வருவதாகவும் கவிமாறன் தெரிவித்தார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



