
கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சீனப்புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் ஆறாம் ஆண்டு மாணவருக்கான பிரியாவிடை நிகழ்வு
கோலக்கங்சார்,பிப்.9-
கோலக்கங்சார் மாவட்டம், கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சீனப்பெருநாள் கொண்டாட்டமும் ஆறாம் வகுப்பு மாணவருக்கான பிரியாவிடை நிகழ்வும் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கொண்டாட்ட விழாவில் சிறப்பு விருந்தினராக இளம்தொழிலதிபர் டத்தோ தங்கராஜா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் ஆறாம் ஆண்டு மாணவருக்கு நினைவு பரிசினையும் எடுத்து வழங்கினார்.

மலேசியாவில் கொண்டாடப்படும் அனைத்துப் பெருநாள்களையும் பள்ளியில் ஒரு கொண்டாட்டமாய்க் கொண்டாடுவது பிற மதத்தவரின் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்வதுடன் அவற்றை மதித்துப் போற்றவும் எதிர்காலத்தில் பல்லின ஒற்றுமையை வளர்க்கவும் இதுபோன்ற கொண்டாட்டங்கள் துணைபுரிகிறன என டத்தோ தங்கராஜா தெரிவித்தார்.
மாணவர் மற்றும் பள்ளியின் மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டு மனமுவந்து வருகையளித்ததோடு மாணவருக்கு உணவும் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் நோக்கில் ஒரு ‘லெமினேட்’ இயந்திரத்தையும் வழங்கிச் சிறப்பித்த டத்தோ ராஜாவிற்குப் பள்ளி மேலாளர் வாரியக்குழுத் தலைவர் வீ.சின்னராஜூ நன்றி கூறினார்.

மாணவர்களுக்கு இது போன்ற பயனான கொண்டாட்ட நிகழ்வினை மிகவும்
குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த பள்ளியின் ஆசிரியர் பெருமக்களுக்கு
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சு.முருகன் தமது மனமார்ந்த நன்றியினைப் தெரிவித்து கொண்டார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



