
பெட்டாலிங்ஜெயா, பிப்.9-
மலேசிய கூட்டுறவு நிறுவனத்தின் பயிற்சிகளில் கடந்தாண்டு 17 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொண்டதை போல் இவ்வாண்டு வழங்கப்படும் பயிற்சிகளில் அதிகமான இந்தியர்கள் பங்கேற்க வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியர்கள் மலேசிய கூட்டுறவு நிறுவனத்தின் பயிற்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். இதில் குறிப்பாக அதில் உள்ள வாய்ப்புகளை இந்திய சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.
மலேசிய கூட்டுறவு நிறுவனத்தில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை இந்தியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நாட்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் உள்ளன.
இதில் சராசரி 7 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர் என்று டத்தோ ரமணன் கூறினார்.
நாட்டு மக்கள் தொகையில் 20 விழுக்காடு கூட்டுறவுக் கழகங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் அடிப்படையில் மலேசிய கூட்டுறவு கழகம் நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு உறுப்பினர்களுக்கும் பயிற்சியை வழங்க வேண்டும் என்று டத்தோ ரமணன் அறிவுறுத்தினார்.
தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சின் கீழ் பயிற்சி, வணிகம், பொருளாதாரம் ஆகிய அம்சங்களில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து கூட்டுறவு உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிப்பதில் பங்களிப்பதோடு கூடுதலாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று டத்தோ ரமணன் சொன்னார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



