Malaysia
Trending

தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்-புவான்ஸ்ரீ சுசிதா புதல்வி தனுஷா-விஷால் ரூபன் திருமணம்

கோலாலம்பூர்,பிப்.12-

ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்-சுசிதா தம்பதியரின் புதல்வி தனுஷா விக்னேஸ்வரன் மற்றும் விஷால் ரூபன் யோகரத்தினம் இருவரின் திருமணம் பத்துமலை திருத்தலத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த தனுஷா விக்னேஸ்வரன்- விஷால் ரூபன் யோகரத்தினம் இருவரின் திருமண வைபவம் உலகப்புகழ்ப்பெற்ற பத்துமலை திருத்தலத்தில் காலை 9.00 மணி தொடங்கி காலை 11.00 மணிக்கிடையில் 10 ஆயிரதரதிற்கும் மேற்பட்ட வருகையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இந்த தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இல்லத்திருமண விழாவில் நாட்டின் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்களின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், முன்னாள் அமைச்சரும் மூடா கட்சியின் தலைவருமான YB சைட் சாடின், ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்-டத்தின்ஸ்ரீ கவிதா தம்பதியர், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா மற்றும் நாடு தழுவிய நிலையில் இருந்து ம.இ.கா தலைவர்கள், இளைஞர்-மகளிர், புத்ரா புத்ரியினர், ம.இ.கா உறுப்பினர்கள் என்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இத்திருமண வைபவத்தில் தமிழ்நாடு சென்னையில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் சினிமா நடிகரும் எம்பியுமான கருணாஸ், மதுரை சத்தியம் குழுமத்தலைவர் திரு.செந்தில்குமார் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர். திரு.செந்தில் குமார் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களுக்கு மதுரையில் இருந்து பிரேத்தியேகமாக கொண்டு வந்த மயில் மாலையை மரியாதை நிமித்தம் அணிவித்தார்.

இத்திருமண வைபத்தில் கலந்து கொண்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்களுக்கு தாழைவாழை இலை போட்டு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. அதேவேளையில் சூப்பர் சிங்கர் புகழ் மணி அண்ட் பேன்ஸ் இசைக்கலைஞர்களுடன் காதுகினிய கானங்களுடன் கலைநிகழ்ச்சியும் படைக்கப்பட்டது.

இந்த தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இல்லத்திருமண விழாவில் அனைவரும் பங்கேற்க வசதியாகவே பத்துமலை திருத்தலத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடாரங்கள் அமைக்கப்பட்டு மாதம்பட்டி ரங்கராஜின் விருந்து படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button