
நமது கலை, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை இந்தியாவிற்கு அடுத்து மலேசியாவில்தான் அதிகம் காக்கப்படுகிறது இந்திய தூதர் பிஎன் ரெட்டி புகழாரம்
தேசம் சிறப்பு செய்திகள் குணாளன் மணியம்
பத்துவேவ்ஸ், மே 11–
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான்ஶ்ரீ ஆர்.நடராஜா நிர்மாணித்துள்ள இந்தியக் கலாச்சார மையம் இந்திய பாரம்பரியம், கலாச்சாரத்தை விதைக்கும் முக்கிய அம்சமாக திகழும் என்று மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என் ரெட்டி கூறினார்.

இந்த கலாச்சார மையத்திற்கு இந்திய அரசின் சார்பில் பாரம்பரிய இசைக் கருவிகளை வழங்கியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் திட்டங்களுக்காக தேவஸ்தானத்துடன் இணைந்து தூதரகம் செயல்படும் என்று பிஎன் ரெட்டி தெரிவித்தார்.
விசாவிற்கு விலக்களிக்கப்பட்டதால் மலேசியாவுக்கு வரும்
இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மலேசியாவுக்கான இந்திய தூதர் பிஎன் ரெட்டி கூறினார்.
இந்தியாவிற்கு அடுத்து நமது கலை, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை மலேசியாவில்தான் அதிகம் காக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கு 1 மாத விசா விலக்கை மலேசிய அரசு வழங்கியுள்ளது.
இதனால் மலேசியாவுக்கு வரும் இந்திய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று பிஎன் ரெட்டி மேலும் சொன்னார்.



