
பத்துமலையில் இந்திய கலாச்சார மையம் இன்னும் 3 மாதங்களில் கட்டுமானப்பணி பூர்த்தியாகும் டான்ஶ்ரீ நடராஜா தகவல் தேசம் செய்திகள் குணாளன் மணியம், ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
பத்துமலை, மே 11-
இந்தியர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் பத்துமலையில் கட்டப்பட்டு வரும் இந்திய கலாச்சார மையம் அடுத்த 3 மாதங்களில் பூர்த்தியாகும் என்று .
கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான்ஶ்ரீ ஆர். நடராஜா அறிவித்துள்ளார்.
இந்த கலாச்சார மையத்தின் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிவடைந்துவிட்டது.
இன்னும் எஞ்சிய பணிகளும் துரிதமாக நடைபெற்று வரும் வேளையில் அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் அப்பணி பூர்த்தியாகும் என்று செய்தியாளர் சந்திப்பில் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா கூறினார்.
இந்த கலாச்சார மையத்தில் காட்சிக்கு வைக்கும் நோக்கில் இந்திய பாரம்பரிய இசை வாத்தியங்களை தேவஸ்தானம், மலேசியாவுக்கான இந்திய தூதரகத்திடம் கோரியிருந்தது.
இந்த அடிப்படையின் இசை வாத்தியங்களை இந்திய தூதரகம் வழங்கியது. இது தொடர்பில் வாத்தியக் கருவிகளை ஒப்படைக்கும் நிகழ்வு பத்துமலையில் நடைபெற்றது.
இந்தியர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தேவஸ்தானத்தின் முக்கிய இலக்காக இருப்பதால் அதன் அடிப்படையில் பத்துமலையில் இந்திய கலாச்சார மையத்தை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்திய கலாச்சார, பாரம்பரிய விவகாரங்களில் தேவஸ்தானம் தொடர்ந்து இந்திய தூதரகத்துடன் இணைந்து செயல்படும் என்று டான்ஶ்ரீ நடராஜா மேலும் சொன்னார்.
இந்த நிகழ்வில் இந்திய தூதர் என் ரெட்டி, துணைத் தூதர் சுபாஷினி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.



