Malaysia

இசைநிகழ்ச்சிகள் ஏற்பாட்டுக்கு சிறுநீர் சோதனை திட்டங்கள் இல்லை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பை வரவேற்றார் திலகன் ராமசாமி

இசைநிகழ்ச்சிகள் ஏற்பாட்டுக்கு சிறுநீர் சோதனை திட்டங்கள் இல்லை

அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பை வரவேற்றார் திலகன் ராமசாமி

கோலாலம்பூர், மார்ச் 8- இசைநிகழ்ச்சி நடத்துவதற்கு சிறுநீர் சோதனை நடத்தும் திட்டத்தை மலேசிய அரசு இந்த நேரத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடவில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஜில் கூறியிருப்பது இசைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தடையாக இருக்காது என்று சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தகவல் பிரிவு தலைவர் திலகன் ராமசாமி கூறினார்.

 

எனினும், “பொது பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்ய SOP-களை தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய தயாராக உள்ளோம்” என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபஹ்மி பட்சில் கூறியுள்ளார்.

 

இசை நிகழ்ச்சி இடங்களில் போதைப்பொருள், மது மற்றும் புகைபிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கான அனுமதி செயல்முறையை PUSPAL ஒருங்கிணைக்கிறது.

இசை நிகழ்வு முன், அது நடைபெறும் போது மற்றும் நடைபெற்ற பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.

 

இசைநிகழ்ச்ணி பார்வையாளர்களுக்கு கட்டாய சிறுநீர் சோதனை செய்ய வேண்டும் என சிலாங்கூர் மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

AADK-இன் எதிர்ப்புக்கு ஏற்ப தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு முகமை (AADK), “சிறுநீர் மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வு செய்ய நீண்ட நேரம் தேவை. இது நடைமுறைக்கு ஏற்றதல்ல” என்று கருத்து தெரிவித்தது வரவேற்கதக்கதை என்றார் ஜெயராமன்.

 

இது போன்ற கலைநிகழ்ச்சிகள் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கின்றன. ஆனால், போதைப்பொருள் தடுக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்” என்று கூறுகின்றனர்.

 

“பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும். முரண்பாடான நடத்தை கண்டறியப்பட்டால், உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெளிவுபடுத்தியிருந்த்து பாராட்டத்தக்கது என்று மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தகவல் பிரிவு தலைவர் திலகன் ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button