
வேலைக்கு சென்ற சரண்ராஜ் சுப்ரமணியம் வீடு திரும்பாமல் காணாமல் போனதாக வில்லை
வேலைக்கு சென்ற சரண்ராஜ் சுப்ரமணியம் வீடு திரும்பாமல் காணாமல் போனதாக வில்ல
கோலாலம்பூர், ஜூலை 19-
பூச்சோங்கில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற சரண்ராஜ் சுப்ரமணியம் (வயது 25) வீடு திரும்பாமல் காணாமல் போனதாக அவரது சகோதரர் அருண் சுப்ரமணியம் பூச்சோங் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
கடந்த ஜூலை 17ஆம் தேதி காலை பூச்சோங்கில் உள்ள வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற சரண்ராஜ் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து காலை 8.30 மணியளவில் கிளினிக்கிற்கு செல்வதாக கூறி வெளியேறியுள்ளார். ஆனால், கிளினிகிற்கும் போகவில்லை. வீட்டிற்கும் வரவில்லை. அவரது கைப்பேசியும் காணாமல் போன நாள் தொடங்கி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் எனும் அச்சத்தில் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அருண் தெரிவித்தார்.
சரண்ராஜ் VKR7543 Honda ரக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். காணாமல. போன நாளில் சிவப்பு மற்றும் கருப்பு நிற டி-சட்டை அணிந்திருந்தார். சலண்ராஜை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது பார்க்க நேர்கிறவர்கள் கீழ்க்காணும் கைப்பேசி எண்கள் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ளலாம். 011-21998356, 016-8708312, 010-6661038



