
இந்திய சமுதாயத்தின் நலன் கருதி எந்த கட்சியுடனும் பேச ம.இ.கா தயார்!!! ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் கடன் கட்டி முடிக்கப்பட்டது குறித்து ஏன் பேசவில்லை ம.இ.கா எதற்கும் தயார்!!! தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சூளுரை
இந்திய சமுதாயத்தின் நலன் கருதி எந்த கட்சியுடனும் பேச ம.இ.கா தயார்!!!
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் கடன் கட்டி முடிக்கப்பட்டது குறித்து ஏன் பேசவில்லை
ம.இ.கா எதற்கும் தயார்!!!
தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சூளுரை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரிஸ்ரீநிவாஸ்
சுங்கை சிப்புட்,ஆக.2-
ம.இ.காவின் MIEDயின் கீழ் செயல்படும் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 480 மில்லியன் வெள்ளி கடன் கட்டி முடிக்கப்பட்டது குறித்து ஏன் யாரும் பேசவில்லை என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மஇகாவை குறை சொல்லி்்சொல்லியே அரசியல் நடத்தும் சிலர் ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகத்தின் சிறப்புகள் குறித்து பேசுவதற்கு வாய்வரவில்லை. ஆனால், மைக்கா ஹோல்டிங்ஸை பற்றி பேசி பேசி வெறுப்பேற்றுகிறார்கள். மைக்கா ஹோல்டிங்ஸை மஇகா நிர்வாகம் செய்யவில்லை என்பது அவர்களுக்கு தெரியாதா? என்று சுங்கை சிப்புட்டில் பேராக் மாநில ம.இ.காவின் 79ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றிய போது தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
ம.இ.காவின் குறைகளை பற்றி பேசுபவர்களுக்கு மஇகாவின் நிறையை பற்றி பேச நேரம் இல்லாமல் போய்விட்டது. ஆள் இல்லாமல் போய்விட்டது.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாட்டில் ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், நமது உரிமைகள் அனைத்தும் சுயம்பு லிங்கம் போல் சொந்தமாக கிடைத்து அல்ல. இவற்றை பெற்று தந்தது மஇகாதான் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
நாட்டில் தற்போது நமது மொழி, ஆலயம், பள்ளிகளுக்கு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பது மஇகாதான். அதனால் அரசியல் ஓட்டத்தில் மஇகாவை எப்படி வலுப்பெறச் செய்வது என்பது எங்களுக்கு தெரியும். மக்கள் விழித்து கொண்டனர். ஆகையால் இந்தியர்களின் எதிர்காலத்திற்காக எந்தவொரு கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த மஇகா தாயாராக இருக்கிறோம் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.



