
Malaysia
16 வயது மாணவி கே.ஹஸ்வினியா காணவில்லை ஈப்போ போலிசாரிடம் தகவல் வழங்குவீர்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, ஜன. 8-
சென்ற ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ்
நாளன்று இங்குள்ள தேசிய ஆரம்ப இடை நிலைப்பள்ளி மாணவி கே.ஹஸ்விணியா (வயது 16) என்பவர் காணாமல் போனதான போலிஸ் புகார் பெற்றுள்ளதாக ஈப்போ மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் தெரிவித்தார்
162 அடி உயரம் கொண்ட இவர் ஆகக் கடைசியாக
இங்குள்ள தாமான் சபாஸ் , பெர்சியாரான் பிராசூரிட் -தி 6, எனும் விலாசம் கொண்ட வீட்டில் வசித்தவர் என்றார்
இவரின் விவரம் அறிந்தவர்கள் அருகாமை போலிஸ் நிலையத்தில் தெரிவிக்க வேண்டினார்



