Malaysia

பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் சிங்க நடனம்

பத்துமலை,பிப்.12-

பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் கடந்த 8 பிப்ரவரி வியாழக்கிழமை பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி செங்கல்ராயன் மேற்பார்வையிலும் மாணவர் நலத் துணைத்தலைமையாசிரியர் திரு விக்டர் ஆசீர்வாதம் ஏற்பாட்டிலும் சிங்க நடனம் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

பள்ளியின் நுழைவாயிலில் பட்டாசு வெடிச்சத்தத்துடன் இரண்டு சிங்கங்கள் சிங்க நடனம் ஆடியபடி நுழைந்தது மாணவர்களையும் ஆசிரியர்களையும் வியக்கச் செய்தது. இரண்டு சிங்கங்களும் சிங்க நடனத்தின் பிரட்த்தியேக தாளச் சத்தத்துடன் பள்ளியின் வள்ளுவர் சிலைக்கு இறைவணக்கம் செலுத்தியபின் மேடையிலிருந்த சுவாமி மேடைக்கு மரியாதை செலுத்தப்ப்பட்டது.

சிங்கங்கள் மேடையிலும் கீழ் மண்டபத்திலும் நடனமாடியதைக் கண்ட மாணவர்கள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். சிங்கங்கள் நடனமாடியபடி ஆரஞ்சுப் பழங்களை மாணவர்களுக்குக் கொடுத்ததில் அவர்கள் சந்தோஷத்தின் உச்சத்திற்குச் சென்றனர்.

பள்ளியின் மாணவர்களும் ஆசியர்களும் இரு சிங்கங்களுடன் வெவ்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டு தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இந்நடனத்தின் ஏற்பாட்டாளரான மாணவர்நலத் துணைத் தலைமையாசிரியர் திரு விக்டர் ஆசீர்வாதம், சீனப் பெருநாளையொட்டிய இச்சிங்க நடனம் மிகச் சிறப்பாக நடைபெற உதவிய பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் அறங்காவலர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா அவர்கள், பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி செங்கல்ராயன், பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம், துணைத்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

 

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button