
மித்ராவில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவேன் பி.பிரபாகரன் உறுதி
கோலாலம்பூர்,பிப்.14-
மித்ராவில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை கடமையாக நினைத்து நிறைவேற்றவிருப்பதாக மித்ரா செயற்குழுத்தலைவர் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் சூளுரைத்துள்ளார்.

மித்ரா செயற்குழு தலைவர் என்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு. இது வெறும் பதவியல்ல. இதன் பொருள் கடமை. இதனை நிறைவேற்ற எனக்கு மிகப்பெரிய ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. இதனை முழு மனதுடன் செய்து முடிப்பேன் என்று தமது முகநூல் பிரபாகரன் அவ்வாறு கூறினார்.
மித்ரா செயற்குழுத் தலைவர் என்ற ரீதியில் மித்ரா அலுவலகத்திற்கு முதல் முறையாக வருகை மேற்கொண்டு தமது பணியை தொடங்கிய பிரபாகரன் மித்ரா பணியாளர்களை சந்தித்து கைகுலுக்கினார்.
மித்ரா பொறுப்பு எனக்கு மிகப்பெரிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்து இப்பதவிக்கு என்னை நியமனம் செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு நன்றி. நான் கண்டிப்பாக எனக்கு வழங்கப்பட்ட கடமையை நிறைவேற்றுவேன் என்று பிரபாகரன் சொன்னார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



