Malaysia

சந்திரன் ராமமூர்த்தி Batik Air தலைமைச் செயல்முறை அதிகாரியாக நியமனம்

கோலாலம்பூர், பிப்.14-
Batik Air விமான நிறுவனம் சந்திரன் ராமமுர்த்தியை மீண்டும் தனது தலைமை நிர்வாக அதிகாரியாகச் (CEO) நியமித்துள்ளது.

இந்த நியமனம் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருவதாக அறிக்கை ஒன்றில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முஷாபிஸ் முஸ்தபா பக்ரிக்கு பதிலாகச் சந்திரன் பாதிக் ஏர் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக மீண்டும் தலைமை பொறுப்புக்குத் திரும்பியுள்ளார் என அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே லயன் ஏர் குழுமத்தின் பாதுகாப்பு இயக்குநராக முஷாபிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013 இல் மலிண்டோ ஏர் என அழைப்பட்டப்பட்ட இந்த விமான நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து ஆகஸ்ட் 2019 வரை சந்திரன் இந்நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக பதவி வகித்துள்ளார்.

இந்நிறுவனத்தின் முதல் CEO இவர்தான். தற்போது அந்த விமான நிறுவனம் பாதிக் ஏர் என பெயர் மாற்றம் கண்டுள்ளது. சந்திரன் பின்னர் லயன் ஏர் குழுமத்தில் திட்டமிடல் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். சந்திரன் தலைமையின் கீழ் பாதிக் ஏர் திட்டமிடல்களைச் செயல்படுத்துவதில் விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

அதேநேரத்தில் வலுவான விரிவாக்கம், மேம்பாட்டுச் செயல் திட்டங்கள் நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக நீண்ட கால விரிவாக்கம், தொழில் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்களுக்கு நிலையான பதிப்பை உருவாக்குவதற்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது என்பதும் அந்த விமான நிலையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button