InternationalMalaysia

10.6 கீலோ கிராம் எடை போதை பொருள் வினியோகம்? மரணத் தண்டனை விதிக்கும் குற்றவியல் சட்டத்தில் இரு இந்தோனேசிய மீனவர்கள் மீது குற்றச்சாட்டு.

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, ஜுலை-26
10.6 கிலோ கிராம் எடை மேத்தாம்பிதாமின் வகை சேர்ந்த போதை பொருள் வினியோகித்தான.மரணத் தண்டனை விதிக்கும் சட்டத்தின் கீழ் இந்தோனேசிய மீனவர்களான ஜாஸ்லி ( வயது 48) மற்றும் பூடி ஹேரியான்ஷா ( வயது 42) ஆகிய இருவர் மீது இங்குள்ள செஸ்சன் நீதிமன்ற
நீதிபதி இந்தான் நூருல் ஃ பாரினா சைனால் அபிடின் முன்னிலையில் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

ஜுலை மாதம் 15 ஆம் தேதி இரவு 10 மணியளவில் பாகான் டத்தோ மாவட்டம் கம்போங் பாகான் சுங்கை தியோங் , செலேக்கோ எனும் இடத்தில் இந்த.குற்றம் புரிந்ததான குற்றச்சாட்டை வாசித்த போது குற்றச்சாட்டை ஒப்பிக்கும் வகையில் இருவரும்
தலையை அசைத்தனர்.

இராயண ஆறிக்கைக்கு காத்திருக்கும்.வகையில் செப்டாம்பர் 27 ஆம் தேதி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button