
கோல குபு பாருவில் கெஅடிலான் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது டாக்டர் சத்தியபிரகாஷ்
உலுசிலாங் கூர், மே 8-
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் கெஅடிலான் கட்சி பிரச்சாரங்களில் முழுமையாக பங்கேற்கவில்லை என்பது தவறான குற்றச்சாட்டாகும் என்று
உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியின் நம்பிக்கை கூட்டணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.
கெஅடிலான் கட்சி பிரச்சாரம் செய்யவில்லை என்ற தகவலில் எந்த உண்மையும் இல்லை. வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்து நாங்கள் களத்தில் இருக்கிறோம். நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சோக் தாவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் கெஅடிலான தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது என்று Dr சத்திய பிரகாஷ் விளக்கமளித்துள்ளார்.
கெஅடிலான் கட்சி நிதி பற்றாக்குறை காரணமாக தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த இடைத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் போஸ்டர் பாய் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதன் அடிப்படையில் பிரச்சாரம் குறைவாக இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் அதில் எந்த அர்த்தமும் இல்லை என்று இது தொடர்பில் விளக்கமளித்த டாக்டர் சத்தியபிரகாஷ் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



