MalaysiaSports

தேசிய அளவிலான தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிடையிலான ஒற்றுமை காற்பந்து போட்டி ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி வாகை சூடினர்

கோலாலம்பூர், மே 6-
தேசிய அளவிலான தமிழ்ப்
பள்ளிகளுக்கிடையே ஒற்றுமை காற்பந்து போட்டி அண்மையில் சிறப்பாக நடந்தேறியது.

கிழக்கு வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப்பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் இணைந்து காலை 8 மணிக்கு பண்டார் பாரு பாங்கி எம்பிகேஜே விளையாட்டு அரங்கில்
தேசிய அளவிலான தமிழ்ப் பள்ளிகளுக்கிடையே ஒற்றுமை காற்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது என்று கிழக்கு வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயகாந்தன் ஜெயசீலன் கூறினார்.

எதிர்காலத்தில் கால்பந்து விளையாட்டுத் துறையில் இளம் மாணவர்கள் தங்களது ஆற்றலை வெளிக்கொணருவும் இதுபோன்ற போட்டி விளையாட்டுகள் மிகவும் அவசியம்
என அவர் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

பாங்கி நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ள பள்ளிகளில் குறிப்பாக தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே
ஆக்கப்பூர்வமான விளையாட்டுத் திறனை அடையாளம் கண்டு தொடர்ந்து இது போன்ற போட்டிகளை வழி நடத்துமாறு பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷா ரெட்ஷான் ஜோஹான் கலந்து கொண்டு போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேசினார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவனத் தொடர்புத் தலைவர்
அஹ்மட் அஸ்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை
யாற்றினார்.

இதுபோன்ற போட்டி விளையாட்டுகளை சுமூகமாக செய்த கிழக்கு வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப்பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களை வெகுவாக பாராட்டினார்.

சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன்,
கிழக்கு வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. கெங்கம்மா முனியாண்டி, காஜாங் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. சாந்தி ராஜு, ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி க. சுந்தரி ஆகியோருடன் பள்ளித் தரப்பினர் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இப்போட்டியில் ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது. இரண்டாம் நிலையில் காஜாங் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வெற்றிகோப்பையுடன் பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது
என போட்டியில் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஜெயகாந்தன் ஜெயசீலன் கூறினார்.

 

தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button