Malaysia

பினாங்கு, சிம்பாங் அம்பாட் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய மண்டப நிலம் வாங்குதல் நிதிக்காக தமிழ்ப்புத்தாண்டு இன்னிசை கலை இரவு

பினாங்கு மாநில தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி

பினாங்கு மே 6-
பினாங்கு, சிம்பாங் அம்பாட் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய மண்டப நிலம் வாங்குதல் நிதிக்காக தமிழ்ப்புத்தாண்டு இன்னிசை கலை இரவு அண்மையில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் பினாங்கு மாநில முதல்வர் மாண்புமிகு சாவ் கொன் யாவ்,
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தராஜு, மற்றும் பல பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.

டத்தோஸ்ரீ க.புலவேந்திரன், டத்தோ எம்.டி.ஆர் சேகர் முனியாண்டி,
டத்தோ ஜெ.தினகரன்,
திரு.சந்திரசேகரன், திரு.மு.வீ.மதியழகன்,
திரு.தியாகராஜ்,
ஆலய தலைவர்கள், பொது அமைப்புகளின் தலைவர்கள், ஆலய நிர்வாகதினர், இளைஞர் மகளிர் என திரளானோர் கலந்துக் கொண்ட இந்நிகழ்வில் ஆடல், பாடல், நடனங்கள் இடம்பெற்றன.

ஆலய மண்டப நிலத்தை 3 லட்சம் வெள்ளிக்கு வாங்கிடும் பொருட்டு இந்நிகழ்வில் நிதி திரட்டப்பட்டது.
கணிசமான நிதியை முதல்வர், ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் திரட்டப்பட்டது.

திரளான ரசிகர்கள் கண்டுக்களித்த இந்நிகழ்வில் இடம்பெற்ற அதிஷ்ட குலுக்கில் வழங்கப்பட்ட தங்க நகைகளை அன்பளிப்பு செய்தவர் மிட்டாஸ் ஹொல்டிங் நிறுவனத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button