Malaysia

மேரி, நைகல் கார்னடர், புக்கிட் தாகார், சுங்கை திங்கி, மின்ஞாக் தோட்டங்களை சேர்ந்த 245 பேருக்கு தரை வீடுகள் அமைச்சர் ங்கா அறிவிப்பு

பெஸ்தாரி ஜெயா, மே 6-
உலு சிலாங்கூரில் உள்ள மேரி, நைகல் கார்னடர், புக்கிட் தாகார், சுங்கை திங்கி, மின்ஞாக் ஆகிய 5 தோட்டங்களைச் சேர்ந்த 245 பேருக்கு தரை வீடுகள் கட்டித் தரப்படும் என்று வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவித்துள்ளார்.

பல ஆண்டுகள் நீடித்திருந்த 5 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்நோக்கி இருந்த வந்த வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக புக்கிட் தகாரில் உள்ள சம்பந்தப்பட்ட நிலப்பகுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ங்கா கோர் மிங் இதனை கூறினார்.
.
உலுசிலாங்கூரில் உள்ள மேரி, நைகல் கார்னடர், புக்கிட் தாகார், சுங்கை திங்கி, மின்ஞாக் ஆகிய 5 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த தோட்டங்களை சேர்ந்த மக்கள் இதனால் பல இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிலம் இருந்தும் அதில் அரசாங்கம் தங்களுக்கு வீடுகள் கட்டித் தரவில்லை என அவர்கள் போராடி வந்தத நிலையில் சம்பந்தப்பட்ட 5 தோட்டங்களை சேர்ந்த 245 பேருக்கு தரை வீடுகள் கட்டித் தரப்படும் என்று வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

மத்திய அரசாங்கம், வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு, மாநில அரசாங்கம், பெர்ஜாயா கோர்ப்பரேஷன் ஆகியவற்றின் ஒத்துழைப்பில் இந்த இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கமும் மாநில அரசாங்கமும் இந்த திட்டத்திற்காக 75 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. அதேநேரத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் 35 மில்லியன் வெள்ளி ஒதுக்கீயுள்ளது.

பெர்ஜாயா நிறுவனம் 20 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளது. ஆகவே மேற்கண்ட் 5 தோட்டங்களைச் சேர்ந்த 245 பேருக்கு இங்கு தரை வீடுகள் கட்டித் தரப்படும். இந்த வீடமைப்பு திட்டம் அடுத்த 22 மாதங்களில் நிறைவு பெறும் என்று அமைச்சர் ஙகா சொன்னார்.

இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியின் நம்பிக்கை கூட்டணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button