Malaysia

மரம் வேரோடு சாய்ந்தது தலைநகர் மோனோரயில் தண்டவாளம், வாகனங்கள் சேதமடைந்தன

கோலாலம்பூர், மே 7-
மோனோரயில் தண்டவாளம் அருகில் இருந்த மரம் வேரோடு பிடுங்கி சாய்ந்த சம்பவத்தில் தண்டவாளம் மற்றும் அதனை சுற்றியிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த சம்பவம் தலைநகர் ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் செவ்வாய்க்கிழமை மாலையில் கடுமையான மழை பெய்த சமயத்தில் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் கடுமையான மழை, புயல்காற்று காரணமாக வேரோடு பிடுங்கிக் கொண்ட மரம் மோனோரயில் தண்டவாளம் மற்றும் அதனை சுற்றியுள்ள வாகனங்கள் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தினால் ரயில் பயணிகள், வாகனமோட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரத்தை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபற்று தற்போது நிலைமை சீராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button