Malaysia

இந்திய இளைஞர்களுக்கான திறன் பயிற்சித் திட்டங்களுக்கு 30 மில்லியன் ஒதுக்கீடு நன்மை பயக்கும் மைக்கி தலைவர் டத்தோஶ்ரீ கோபால கிருஷ்ணன் நம்பிக்கை

கோலாலம்பூர், மே 7-
இந்திய இளைஞர்களுக்கான திறன் பயிற்சித் திட்டங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள 30 மில்லியன் இந்திய இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று நம்புவதாக மைக்கியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.

மலேசிய இந்திய இளைஞர் சமூகத்தை மேம்படுத்துவதற்கும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த திட்டம் வித்திடும் என மைக்கி நம்புகிறது. மைக்கி நாடு தழுவிய நிலையில் 17 வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட 30 வர்த்தக சமுதாயத்துடன் செயல்பட்டு வருவதால் அந்த நம்பிக்கையை கொண்டுள்ளதாக டத்தோஶ்ரீ கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் அறிவித்த இந்தியர் திறன் பயிற்சித் திட்டத்தை மைக்கி வரவேற்கிறது. கடந்த 2022 பிரதமராக பதவியேற்ற டத்தோஶ்ரீ அன்வாரின் மடானி அரசாங்கத்தின் மற்றொரு மகத்தான திட்டம் இதுவாகும் என்று டத்தோஶ்ரீ கோபால கிருஷ்ணன் பாராட்டினார்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், நிதியமைச்சு, எச்ஆர்டி கோர்ப், மித்ரா இந்த முயற்சியை முன்னெடுப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
இவ்வேளையில் மைக்கி அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்த நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியின் வழி
மலேசிய இந்திய இளைஞர் சமூகத்தின் திறன்களை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உண்டு என்றார் டத்தோஶ்ரீ கோபால கிருஷ்ணன்.

இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் பெறும் திட்டங்கள் வெற்றி பெற மைக்கி எப்போதும் அரசாங்கத்திற்கு துணையாக இருக்கும் என்று டத்தோஶ்ரீ கோபால கிருஷ்ணன் மேலும் சொன்னார்.

 

தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button