
தமிழ் ஊடகங்கள் மூலம் முறையான தகவல்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்க நடவடிக்கை தகவல், தொடர்பு அமைச்சர் பஹாமி பட்சில் தகவல்
கோலாலம்பூர், மே 8-
தகவல் அமைச்சு தமிழ் ஊடகங்களுடன் அணுக்கமான உறவை கொண்டு இந்திய மக்களுக்கு முறையான தகவல்களை கொண்டு சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அதன்அமைச்சர் பஹாமி பட்சில் கூறினார்.
தமிழ் ஊடகங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள், சவால்கள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும் என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் ஊடகங்களுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் பஹாமி பட்சில் அவ்வாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் இந்திய சமுதாயத்தில் நிலைத்திருக்கும் சில விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனை கவனிப்பதாக பஹாமி பட்சில் சொன்னார்.
அமைச்சர் பஹாமி பட்சில் அவர்களுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்கள், பிரச்சனைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் தமிழ் ஊடகங்கள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பஹாமி பட்சில் கேட்டுக் கொண்டார்
ஒற்றுமை அரசாங்கம் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய சமுதாயத்திற்கு கொண்டு சேர்க்க தமிழ் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றார அவர் வலியுறுத்தினார்.
அந்த வகையில் தேசம் ஊடகத்தின் தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் தமது கருத்துக்களை அமைச்சர் பஹாமி பட்சிலிடம் முன் வைத்தார். தமிழ் ஊடகங்களை சார்ந்த ஊடகவியாளர்களின் பெயர் பட்டியல் அனைத்து அமைச்சுக்களிலும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று குணாளன் மணியம் கேட்டுக் கொண்டார்
அதன்படி ஊடகங்கள், அமைச்சுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் புரிதல் அதிகரிக்கும். அந்த வகையில் தமிழ் ஊடகங்கள் இந்திய சமுதாயத்திற்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று பஹாமி பட்சில் வலியுறுத்தி இருந்தார்.
இந்த தமிழ் ஊடகங்களுக்கு இடையிலான கலந்துரையாடலில் இணைய, பத்திரிகை ஊடகங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



