IndiaInternationalMalaysia

போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசினார் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

கோவை, மே 5-
சர்ச்சையான கருத்துக்கள், அறிக்கைகள் மற்றும் தகவல்களை வெளியிட்டு பல்வேறு தரப்பினரிடன் எதிர்ப்பை சம்பாதித்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனியில் கோவை மாநாகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்தனர். போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்தும் சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகள் கூறியதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் தனது வலைத்தளங்களில் சர்ச்சையான தகவல்களை வெளியிட்டு வந்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் அத்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தமிழக அரசிற்கு எதிராக பல்வேறு கடுமையான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளை முன் மவைத்திருந்தார். தமிழகத்தில் பல்வேறு தரப்பினரை கடுமையாக சாடியிருந்த சவுக்கு சங்கர் மிக அண்மையில் நாடு கடந்து முக்கிய பிரமுகர் ஒருவர் மீதும் அவதூறாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

பணம் கொடுத்தால் எதையும் செய்வார் என்று தமிழக ஊடகங்கள் சவுக்கு சங்கர் மீது குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் தேனியில் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்காக கோவை அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கர் பயணித்த போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சவுக்கு சங்கருக்கு சீராய்ப்பு காயம் ஏற்பட்டது. எனினும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு மற்றொரு வாகனத்தில் கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநாகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
குறிப்பிடத்தக்கது.

தேசம் செய்திகள் New Source Bagavathimanian India 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button