
மலேசிய இந்திய குத்தகையாளர் சங்க உறுப்பினர்கள் நலனுக்காக பாடுபடுவேன் புதிய தலைவர் ஆனந்தன், துணை தலைவர் டத்தோ கணேஷ் சூளுரை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், மே 6-
மலேசிய இந்தியக் குத்தகையாளர் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவிருப்பதாக அதன் புதிய தலைவர்
ஆனந்தன் கணேசன் கூறியுள்ளார்.

மலேசிய இந்தியக் குத்தகையாளர் சங்கத்தின் புதிய தலைவராக ஆனந்தன் கணேசன் வெற்றி பெற்றுள்ளார். குத்தகையாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுவதாக ஆனந்தன் தெரிவித்தார்.
இதற்காக பல்வேறு திட்டங்களை அடையாளம் கண்டிருக்கிறோம். அதனை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருப்பதாக ஆனந்தன் சொன்னார்.
மலேசிய இந்தியக் குத்தகையாளர் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு பேராளர் மாநாடு மே 5 ஞாயிற்றுக்கிழமை பத்துகேவ்ஸ் ஷெங்கா காண்வேன்ஷன் மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தல் கூட்டமாக நடைபெற்ற இதில் நடப்புத் தலைவர் டத்தோ ஜெனா இளம் தலைமுறையினருக்கு வழிவிட்டு தலைவர் பதவியைத் தக்காத்துக் கொள்ள போட்டியிடவில்லை.
இந்நிலையில் தலைவர் பதவிக்கு நடப்பு பொருளாளர் ஆனந்தன், உதவித் தலைவர் சரவணன் ஆர்.டி. மணியம் இருவரும் போட்டியிட்டனர். இதில் ஆனந்தன் 113 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சரவணனுக்கு 38 வாக்குகள் கிடைத்தன.
துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டத்தோ கணேஷ் முரஜ் 89 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பார்த்திபன் 61 வாக்குகள் மட்டும் பெற்ற்றார்.
உதவித் தலைவர்களாக டத்தோ ஜாலாலூடின், சரவணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு பெற்றனர். செயலாளராக தயாளன், துணை செயலாளராக கே. சிவபாலன், பொருளாளராக தியாகராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
8 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவிக்கு டத்தோ பாலகணேசன் பன்னீர் செல்வம், நவநீதன், பிரேம்குமார், விஸ்வநாதன் ஆவிலிங்கம், கோபி ராஜ், மோகன் கிருஷ்ணன், டத்தோ எம்.பி. நாதன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுகுமாறன் தேர்தல் குழுத் தலைவராக தேர்தலை நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



