Malaysia

உலு சிலாங்கூரில் அரசாங்க பொது மருத்துவமனை நீண்ட நெடுந்தூர நடவடிக்கை என்றாலும் அதனை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் டாக்டர் சத்தியபிரகாஷ் சூளுரை

தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோல குபு பாரு, மே 6-
உலு சிலாங்கூர் மக்களின் நலன் கருதி இப்பகுதியில் அரசாங்க பொது மருத்துவமனை கட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று உலு சிலாங்கூர் நம்பிக்கை கூட்டணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.

உலு சிலாங்கூரில் பொது மருத்துவமனை தேவை என்பது எனது கருத்து. கடந்த பொதுத் தேர்தலில் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட போது இங்கு மருத்துவமனை கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். துர்திஷ்டவசமாக
சிறு பெரும்பான்மையில் நான் தோல்வி கண்டேன். எனினும் நான் மருத்துவமனை விவகாரத்தை மறந்து விடவில்லை என்று சத்திய பிரகாஷ் தெரிவித்தார்.

உலு சிலாங்கூர் தொகுதி மலாக்கா மாநிலத்தை விட பெரியது. இங்கு வசிக்கும் மக்கள் பயன் பெரும் வகையில் அனைத்து வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை கட்டுவது மிகவும் அவசியம். ஆகவே, இந்த விவகாரத்தை நான் கைவிட மாட்டேன். தொடர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவேன் என்று சத்திய பிரகாஷ் சொன்னார்.

இந்த உலுசிலாங்கூர் தொகுதியில் வெற்றி பெற்றவர் இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். வெற்றி பெற வைத்த மக்களின் நலனுக்காக அவர் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என்று Dr சத்திய பிரகாஷ் மேலும் கூறினார்..

தேசம் செய்திகள் குணாளன் மணியம் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button