Malaysia

நிபுணத்துவ மருத்துவர்களால் நடத்தப்படும் மாதாந்திர இலவச மருத்துவ முகாம்

பினாங்கு, மே 8-

பினாங்கு சிவசாந்தா தர்ம மருத்துவ முகாமின் ஏற்பாட்டில் மாதமொரு இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் பினாங்கு ரீவர் ரோடு (ஜாலான் சுங்ஙை தமிழ்ப் பள்ளி அருகில்
11, River Road, Penang. அமைந்துள்ள அம்மையத்தில் நடைபெற்று வருகிறது.

இம்மாதத்திற்கான இலவச சேவை மையம் மே 9 வியாழக்கிழமை மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். மருத்துவத் துறையில் மிகவும் தேர்ச்சிப் பெற்ற மருத்துவர்கள் ஒன்றிணைந்து இம் முகாமில் இலவச சிகிச்சை வழங்குவதோடு, நல்ல உடல் ஆரோக்கிய மருத்துவ சம்பந்தப்பட்ட ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.

டாக்டர் தேவேந்திரன் முனியாண்டி பிரசவம், கர்ப்பம் தரித்தல், கர்ப்பக் கால ஆலோசனைகள், சிசு பாதுகாத்தல் மற்றும் பிரசவ வழிமுறைகள் போன்ற சிகிச்சைக்கான ஆலோசனை வழங்குவார். ICON தேசிய புற்று நோய் மையத்தின் உயர்நிலை மேலாளர் மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.அமிர் ஷா புற்று நோய் சிகிச்சைக்கான வழி துறைகள் குறித்து விளக்குவார்.

டாக்டர் டான் புண் சியோங் கை, கால் மற்றும் உடல் எலும்பு முறிவுக்கான சிகிச்சையும், ஆலோசனையும் வழங்குவார். இவர்கள் சிகிச்சை செய்து அதற்கான மருந்துகளும் வழங்குவதோடு, தேவைப் படுவோர்களுக்கு மருத்துவ உறுதிக் கடிதங்களும் வழங்குவர்.

இதன் மேல் விபரங்களுக்க திரு ப. முருகையாவுடன்
016 4449246 என்ற எண்ணில் தொடர்பு கொள்லாம்.

பினாங்கு மாநில தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button