
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் 15 இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கியது
பினாங்கு மாநில தேசம் செய்தியாளர் மு.வ கலைமணி
பினாங்கு, மே 8-
பினாங்கு மாநிலத்தில் பிறந்து, இங்கேயே வாழ்ந்து வரும் இந்திய மாணவர்கள் சுமார் 15 மாணவர்களுக்கு 13,500 வெள்ளி,
அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப பகிர்ந்து வழங்கப்பட்டதாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர் ஏ. விக்னேஸ்வரன் கூறினார்.

ஒன்பது இளங்கலை பயிலும் மாணவர்களுக்கும்
6 டிப்ளோமா மாணவர்களுக்கும் இந்த நிதி வழங்கப்பட்டது.
இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக கல்வி நிலை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் இதுவரையில் 37 மாணவர்கள் இத்திட்டத்தின் வழி பயனடைந்துள்ளனர். இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் 18 மாணவர்கள், மார்ச் மாதம் நாலு மாணவர்கள்,. மே மாதம் 15 மாணவர்கள் என இதுவரை சுமார் 34,700 வெள்ளி இந்து அறப்பணி வாரியம் வழங்கி உள்ளதாக காசோலையை எடுத்து வழங்கிய பின் வாரியத் துணைத் தலைவர் டாக்டர் ஆர் எ. லிங்கேஸ்வரன் தமதுரையில் கூறினார்.

மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா பெற்றோர்களுக்கும், ஆணயர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார.
பினாங்கு இந்த அறப்பணி வாரியம் தொடர்ந்து இந்திய மாணவர்களுக்காக தனியொரு அக்கறை செலுத்தி வருவதாகவும் அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு 99 மாணவர்களுக்கும்,
2023 ஆம் ஆண்டு 54 மாணவர்களுக்கும் மானியங்கள் வழங்கி அவர்களுக்கு வாரிய சார்பாக நிதியுதவி வழங்கியுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.



