Malaysia

சுங்கை சிப்புட் பிகேஆர் தொகுதியின் விருந்தோம்பல்

 

ஈப்போ, ஜுன். 21- சுங்கை சிப்புட் தொகுதியை தற்போது புதிய பிகேஆர் தலைமைத்துவம் வழிநடத்தி வருகின்றனர்.

நடந்து முடிந்த தொகுதித் தேர்தலில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி கூறும் வகையில் இப்பாராட்டு விழா ஈப்போ ரோயல் கிளப்பில் விருந்தோம்பலை ஏற்பாடு செய்ததாக சுங்கை சிப்புட் பிகேஆர் தொகுதியின் தலைவரான நோவிந்தன் கிருஷ்ணன் கூறினார்.

இந்நிகழ்வு குடும்பபாணியில் குறிப.பாக குடும்ப உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளும் நிகழ்வாக நடந்தேறியது. கட்சிக்காகவும் மற்றும் தொகுதிகாகவும் சேவையாற்றிய கட்சியின் சேவகர்களான உறுப்பினர்களுக்கு நன்றி கூறும் வகையில் அமைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

சுங்கை சிப்புட் தொகுதியில் பிகேஆர் கிளைகள் மற்றும் தொகுதியின் மேம்பாட்டிற்கு சேவையாற்றிய அனைத்து நல்லுள்ளங்களும் இந்நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர் என்று அவர் சொன்னார்.

இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகன் மூக்கன் கலந்துக்கொண்டார். அதே வேளையில் இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட பிரமுகர்கள், தன்னார்வலர்கள், செய்தியாளர்கள், தனிநபர்கள் மற்றும் பிகேஆர் கட்சியின் உறுப்பினர்களுக்கு அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button