Malaysia

ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார்

புதுடெல்லி,டிச.4-
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார்.

ரஷ்யாவின் கஸான் நகரில், ‘பிரிக்ஸ்’ நாடுகளின் 16ஆவது மாநாடு நடைபெற்றது.
இந்த அமைப்பில் உள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எதியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள், சர்வதேச அரசியல், பொருளாதார நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். ரஷ்ய – இந்திய தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து பேசுவது என்று ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்திய – ரஷ்ய ஆண்டு மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், 23ஆவது இந்திய – ரஷ்ய ஆண்டு மாநாடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் அதிபர் புதின் பங்கேற்க இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button