Malaysia

தம்பூன் அருள்மிகு தேவி ஓம் ஸ்ரீ சிவ சக்தி அங்காளம்மாள் பரமேஸ்வரி தேவஸ்தானத்தின் 54 ஆம் ஆண்டு திருவிழா ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என்.டி. கதிரவன் குருக்கள் அழைக்கிறார்

தேசம் செய்திகள் ஆர்.பாலசந்தர்

ஈப்போ, ஜூன் 21-
ஈப்போ தம்பூன் பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு தேவி ஓம் ஸ்ரீ சிவ சக்தி அங்காளம்மாள் பரமேஸ்வரி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் நாடு தழுவிய நிலையில் வந்த வண்ணமாக இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த ஆலயத்தின் திருவிழா வரும் ஜூன் 23 தேதியன்று ஞாயிற்றுக்கிழமை மிக விமரிசையாக நடைபெறவுள்ளதாக தேவஸ்தானத்தின் செயலாளர் என்.டி.கதிரவன் குருக்கள் கூறினார்.

இதுவரை ஒவ்வொரு நாளும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் வந்த வருகை புரிந்து அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனின் ஆசிர்வாதத்தை பெற் வேண்டும்.

ஆலயத்தின் கொடியேற்றம் ஜூன் 15 ஆம் தேதியன்று நடைபெற்றது. அடுத்து இரத ஊர்வலம் ஜூன் 22ஆம் தேதியன்று மாலை மணி 6.31 க்கு ஆலயத்திலிருந்து புறப்படும். அடுத்து, மறுநாள் தீமீதி திருவிழா நடைப்பெறும். காலை 6 மணிக்கு மேல் பால் குடம், கோமாதா பூஜை, மகேஸ்வர பூஜை, சக்தி கரகம் பாலித்தல், பூ குழி இறங்குதல் என பல சிறப்பு நிகழ்வுகள் உண்டு என அவர் குறிப்பிட்டார்.

மேலும் கூறிய அவர், மலேசியாவில் பிரசித்தி பெற்ற ஆலயம் என்பதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வருகையளிப்பார்கள்.
நாடு தழுவிய நிலையில் அருள்மிகு தேவி ஸ்ரீ சிவ சக்தி அங்காளம்மாளை வேண்டி கொள்வதின் வழி பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆலயத்திற்கு ஆதரவு அளிக்க விரும்பும் பக்தர்கள் தலைவர் எம்.மகேந்திரன் ( 018-2559965) அல்லது என்.டி.கதிரவன் குருக்கள் (017-5984852) என்ற எண்களை தொடர்புக் கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button