Malaysia

கோலகங்சார் மாவட்டத்தின் திருமுறை ஒதும் விழா சிறப்பாக நடந்தேறியது

கோலகங்சார்,ஜுலை. 5-
மலேசிய இந்து சங்கம்,கோலகங்சார் வட்டாரப் பேரவையின் 46 ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா கோலகங்சார் காந்தி ஞாபகர்த்த தமிழ்ப்பள்ளியில் சிறப்புடன் நடைபெற்றது.

வட்டார ரீதியில் நடைபெற்ற இப்போட்டியில் காந்தி ஞாபகர்த்த தமிழ்ப்பள்ளி , காபிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பேராக் ரீவர் வேலி தமிழ்ப்பள்ளி, கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுங்கை பியோங் தமிழ்ப்பள்ளி, கிரீக் தமிழ்ப்பள்ளி, கிளிபர்ட் இடை நிலைப்பள்ளி, இலாஜா பெரும்புவான் இடை நிலைப் பள்ளி , தெமொங்கோங் கட்டி இடை நிலைப்பள்ளி, , தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய சமய வகுப்பு மாணவர்கள் ஆகியோர் இப்போட்டியில் பங்கேற்றனர்..

இப்போட்டியில். திருமுறை ஓதுதல் , , பதிகம் பாராயணம், பேச்சுப் போட்டி, , வண்ணம் தீட்டுதல் கோலப்போட்டி ஆகியவைகள் இடம் பெற்றது.இப்போட்டிகளில் 4 வயது முதல் 60 வரை வந்துடையவர்கள் கலந்துக்கொண்டனர்.

திருமுறை நமது சமயத்தின் முதன்மையானது. இதனை மாணவர்கள் ஓதுவதால் அவர்களிடையே நல்லொழுக்கமும் நல்ல பண்புகளல வளர துணை புரிகின்றன என்று கோலகங்சார் வட்டார இந்து சங்கத் தலைவர் தயாளன் முனுசாமி கூறினார்.

இதனை மக்களிடையே கொண்டுச் செல்வதில் இந்து சங்கம் பெருமைக் கொள்கிறது. மேலும் இந்நிகழ்வு சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.

கோலகங்சார் வட்டார இந்து சங்கம் தமது சேவையை சிறப்புடன் வழங்குவது குறித்து பாராட்டைத் தெரிவித்துக்கொண்டார்.இதனை மக்களிடையே கொண்டுச் செல்வதில் இந்து சங்கம் பெருமைக் கொள்கிறது .மேலும் இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் மாநில இந்து சங்க பிரதிநிதி ஞானசேகரன்.

எதிர்வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில நிலையிலான திருமுறை ஓதும் விழா சிறப்புடன் நடைபெற அதரவை வழங்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் மாநிலம் மற்றும் வட்டார இந்து சங்க பொறுப்பாளர்கள் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் பலரும் கலத்து சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button