Malaysia

ம.இ.கா தேசிய உதவித்தலைவர் தேர்தல் நடப்பு உதவித் தலைவர் டத்தோ த.மோகன் தோல்வி டத்தோ அசோஜன், டத்தோ முருகையா, டத்தோ நெல்சன் வெற்றி

தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன்,
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர்,ஜூலை 7-
ம.இ.கா தேசிய உதவித் தலைவர் பதவிக்கான தேர்தலில் நடப்பு உதவித் தலைவர் டத்தோ த.மோகன் தோல்வி கண்ட நிலையில் டத்தோ அசோஜன், டத்தோ முருகையா, டத்தோ நெல்சன் ஆகிய மூவரும் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாலை 2.50 மணிக்கு வெளிவந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்த முறை ம.இ.காவின் உதவித்தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. ம.இ.காவின் முக்கிய புள்ளியாக கருதப்பட்ட டத்தோ த. மோகன் தோல்வி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உதவித் தலைவருக்கான மூன்று இடங்களுக்கு முறையே டத்தோ அசோஜன் முதல் நிலையில் 8,633 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது நிலையில் டத்தோ முருகையா 8,566 வாக்குகளும் மூன்றாவது நிலையில் டத்தோ நெல்சன் 8,338 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நடப்பு உதவித்தலைவர் டத்தோ த.மோகன் 8,280 வாக்குகள் பெற்று நான்காவது நிலையில் தோல்வி கண்டுள்ளார். ம.இ.கா உதவித் நால்வர் தேர்தலில் போட்டியிட நடப்பு உதவித்தலைவராக இருந்த டத்தோ த.மோகன், டத்தோ முருகையா, டத்தோ நெல்சன் ஆகிய நால்வர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

ம.இ.கா கட்சித் தலைமையோடு இணைந்து பணியாற்றக்கூடிய தலைவர்களை தலைமைத்துவம் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் இம்மூவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமக்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன் துணைத்தலைவராக இருக்க வேண்டும் என்பதை பகிரங்கமாக தெரிவித்து அதன்படி அவர் போட்டியில்லாமல் ஏகமனதாக துணைத்தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button