Malaysia

வளர்தமிழ் விழா சாம்பினாக மகா கணேசா தமிழ்ப்பள்ளி.

பெருவாஸ், ஜேலை, 2- மஞ்சோங் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான வளர்தமிழ் விழா 2024, கடந்த புதன்கிழமை 26 ஜூன் 2024 சிறப்பாக பெருவாஸ் தமிழ்ப்பள்ளியில் நடந்தேறியது.

இதில் 15 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மூன்று போட்டிகளில் கலந்து சிறப்பாகத் தங்கள் படைப்பினை வெளிப்படுத்தினர்.

இம்முறை மூன்று போட்டிகளே போட்டியிடப்பட்டாலும் மூன்று போட்டிகளும் மாணவர்களின் திறமையை வெளிக்கொணருவதாகவே அமைந்தன. பேச்சுப்போட்டி, கவிதை ஒப்புவித்தல் மற்றும் திருக்குறள் மனனம் போட்டிகள் செவ்வனே காலை 9-க்குத் தொடங்கின.

குறிப்பாக மகா கணேச வித்தியாசாலை மாணவர்கள் மூன்று போட்டிகளிலும் மிகச் சிறந்த அடைவுநிலையை பெற்றனர். அவர்களின் சாதனை கீழ்வருமாறு:- பேச்சுபோட்டி
இரண்டாம் நிலை – புகழேந்தி பழனிசாமி;கவிதை ஒப்புவித்தல்
முதல்நிலை – நிலவினி கோபால்;
திருக்குறள் ஒப்புவித்தல்
முதல்நிலை – திவானி சர்குணன் வெற்றி வாகை சூடினர்.

முன்னாள் தலைமையாசிரியர்கள், மஞ்சோங் மாவட்டத் தலைமையாசிரியர்கள், துணைத்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், தமிழ் நெஞ்சங்கள், போட்டியாளர்கள் என பலர் புடை சூழ இப்போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது.

இவ்வருடத்தின் சுழற்கிண்ணத்தை இம்முறை மகா கணேச வித்தியாசாலை தட்டிச் சென்றது.

முதலாம், இரண்டாம் நிலை வெற்றியாளர்கள் வருகின்ற 13 ஜூலை மாநில அளவிலான வளர்தமிழ் விழாவில் வட்டாரத்தைப் பிரதிநிதித்துப் பங்கு கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button