InternationalMalaysia

நாட்டின் பார்வையைக் கவர்ந்திழுக்கும் சூப்பர் மோடல் யுனிவர்ஸ் மலேசியா 2024-ஆம் அழகு போட்டி அமோக வெற்றி – டத்தோ ஶ்ரீ டாக்டர் ஶ்ரீ சுகுந்தன் பெருமிதம்.

முத்தியாரா டாமன்சாரா, ஜூலை 3-
ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றை,அதன் ஆழமான ஆளுமையைப் படம் பிடித்துக்காட்டும் கண்ணாடியாகத் திகழ்வது அந்நாட்டின் கலை‌, கலாச்சாரப் பண்பாட்டுத் துறையினரும் அதன் மீதான அக்கறை மிக்கவர்களும்தான் என்றால் மிகையன்று.
இன்றைய நிலையில், உலகின் தரமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக அழகு ராணிப் போட்டிகள் அனைத்துலக அரங்கில் நடைபெற்று சிறப்பான இடத்தைப் பிடித்து வருகின்றன என்பதை எவராலும் மறுக்கவியலாது.

உலக பிரபல அழகுப் போட்டி வரிசையில் இடம்பெற்ற சூப்பர் மோடல் யுனிவர்ஸ் மலேசியா 2024-ஆம் ஆண்டின் இறுதிச் சுற்று அனைத்துலகப் பார்வையையும் கவனத்தையும் ஈர்த்து மிகப் பிரமாண்டமாக நம் நாட்டில் நடைபெற்றது.

ரோயலீ சூலான் டாமான்சாரா‌ நட்சத்திரத் தங்கும் விடுதியில் அமைந்துள்ள முத்தியாரா கிராண்ட் போல்ட் ரூமில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலும் அழகு சேர்க்கும் வண்ணமாக, மஜ்லிஸ் கெபுடாயான் டான்‌ வாரிசான் நூசாந்தாராவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஶ்ரீ சுகுந்தன்‌ அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டு பெறுமைபடுத்தப்பட்டார்.

மலேசியா மடானி கோட்பாட்டின் கீழ், மேம்பாடு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதிலும் மற்றும் இத்துறைக்கான நாகரிக தனித்துவத்தை அறிமுகப்படுத்துவதில், சூப்பர் மோடல் யுனிவர்ஸ் மலேசியா 2024 நிகழ்வின் ஏற்பாட்டாளரும் தேசிய இயக்குநருமான அமித்தா கோர் மல்ஹேத்ராவின் அரும்பனி,நாட்டின் இளம் வயதினர்களை ஈர்க்க செய்து இத்துறையில் பங்களிக்க வைத்தது மிக பாராட்டுக்குறியது என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் ஶ்ரீ சுகுந்தன்‌ புகழாரம் சூட்டினார்.

அழகு போட்டியை திறம்பட வடிவமைத்து வழி நடத்துவது மலேசியத் திருநாடும் இதற்கு விதிவிலக்கல்ல என்று கூறிய அவர்,ஆறாம்‌ ஆண்டாக வெற்றிகரமாக நடைபெற்ற இந்நிகழ்வு சிறந்த பிரபலங்களை உருவாக்க பாதை அமைத்து கொடுக்கக் கூடிய தளமாக உருவாகலாம் என்று மேலும் அவர் கூறியது‌ ஏற்க கூடிய கருத்தே என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் ஶ்ரீ சுகுந்தன்‌ தெரிவித்தார்.

இதற்கிடையில், ஊழல் அதிகார முறைகேடுகளை மூடி மறைத்தாள் அரசு துறை‌ தலைவர்களுக்கு பதவி உயர்வு இல்லை என்று எச்சரிக்கை விடுவித்த மலேசியாவின் பத்தாவது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூற்றையை மக்களால் வரவேற்கப்பட்டது என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் ஶ்ரீ சுகுந்தன்‌ கூறினார்.

தொடர்ந்து‌ கூறுகையில், நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் நிலைத்தன்மையான ஆட்சிக்கும் அதோடு நாட்டின் நிபுணத்துவ தொழிற்துறை வளர்ச்சிக்குத் தேர்ச்சிப் பெற்றவர்களை உருவாக்கும் அடிப்படையில் துணைப் பிரதமரும் தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹமாட் ஜாயிட் ஹமிடி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய TVET எனும் பயிற்சிகளில் மலேசியர்கள் முன்னேற்றப் போக்குடன் சாதனைப் புரிய தோள்கொடுத்து வருவதை மேற்கோள் காட்டினார்.

தாம் தலைமைப் பொறுப்பேற்றிருக்க கூடிய மஜ்லிஸ் TVET நெகாரா மூலியமாக இந்திய இளைஞர்களுக்கு வேண்டியதைச் செய்வேன் என்பதை உறுதியளித்தது பிரமிப்பூட்டுகிறது.

நாட்டின் தொழில்துறை மேம்பாடு, நிபுணத்துவ திறன் பயிற்சிகளில் இந்திய இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கும் மஜ்லிஸ் ட்வெட் தலைவரின் உரையை மனம் திறந்து பாராட்டுவதோடு அதே வேளை, இந்திய இளைஞர்கள் இவ்வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படியும் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஶ்ரீ சுகுந்தன்‌ வலியுறுத்தினார்.

விமர்சையாக நடைப்பெற்ற சூப்பர் மோடல் யுனிவர்ஸ் மலேசியா 2024-ஆம் ஆண்டு இறுதிச் சுற்றின் முதல் வெற்றியாளராக இளம் வழக்கறிஞர் டயாளினி துரைசாமியை நீதிபதிகளால் தேர்வு செய்யப்பட்டு அழகு ராணி கிரிடம் சூட்டப்பட்டது.
ஆண்கள் பிரிவில் முதல் நிலை வெற்றியாளராக யுவன் ஷரனுக்கு முடி சூட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக பெட்டிட் பிரிவு போட்டியாளர்களை அரங்கத்தில் அமர்ந்திருக்கும் வருகையாளர்களின் பார்வையும் கவனத்தையும் ஈர்த்தது என்று கூறினால் மிகையாகாது.
உளவியல் துறையைச் சார்ந்த துர்காஷினி பத்திகிருஷ்ணன் அவர்களுக்கு சூப்பர் மோடல் யுனிவர்ஸ் மலேசியா போட்டி 2024-இன்‌ வெற்றியாளராக முடி சூடப்பட்டதல்லாமல் மக்களின் தேர்வு வெற்றியாளர் விருதும் வழங்கப்பட்டு கெளரவப்படுத்தப்பட்டார்.அழகுக்கு வண்ணம் சேர்த்த இளம் வெற்றியாளர் துர்காஷினி அவர்களுக்கு வெற்றிகேடயமும், நற்சான்றிதழும் எடுத்து வழங்கியதோடு தமது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஶ்ரீ சுகுந்தன்‌.

சிறப்புமிக்க நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,நம் நாடும் பன்னாட்டின் வெற்றியாளர்களுக்கு பாராட்டு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மலேசியா மோடல் அழகிகள் உலக அரங்கத்தில் நிச்சயம் தடம் பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் ஶ்ரீ சுகுந்தன்‌ கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button