
தேசிய ம.இ.காவில் Exco Sukan Putera பதவிக்கு தினேஷ் ரத்தினம் நியமனம் சிறந்த சேவை வழங்க உறுதி
கோலாலம்பூர்,ஜூலை 2-
தேசிய ம.இ.காவில் புத்ரா பிரிவு Exco Sukan Puteta பதவிக்கு நியமன் செய்யப்பட்டுள்ள தினேஷ் ரத்தினம் சிறந்த சேவையை வழங்க உள்ளதாக உறுதியளித்துள்ளார்.
என் மீது நம்பிக்கை வைத்து Exco Sukan Puteta பதவிக்கு நியமனம் செய்த ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், மஇகா புத்ரா தேசிய கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதில் முக்கியமாக இந்த வேளையில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வதாக தினேஷ் கூறினார்.

தினேஷ் 2024/2027 காலகட்டத்திற்கான தேசிய ம.இ.கா Putera பிரிவின் EXCO ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த பதவியில் இருக்கும் காலகட்டத்தில் முடிந்தவரை அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற உறுதியளிக்கிறேன்.
MIC Putera Sports Bureauவின் வழி இந்திய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், குறிப்பாக மலேசியாவில் உள்ள அனைத்து எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகளிலும் வெற்றியை அடைந்து நமது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதை உறுதி செய்வேன்.
இந்த பொறுப்பை நான் வகிக்கும் போது எனக்கு அனைத்து தலைவர்களும் உதவி வழிகாட்டுவார்கள் என்று நம்புவதாக தினேஷ் தெரிவித்தார்.



