
தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தலைமைத்துவம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கைகொடுக்க மத்திய செயலவைக்கு போட்டியிடுகிறார் சதாசிவம் காளிமுத்து
கோலாலம்பூர்,ஜூலை 2-
ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமைத்துவம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் கைகொடுக்கும் நோக்கத்தில் மத்திய செயலவைக்கு போட்டியிடுவதாக அம்பாங் ம.இ.கா தொகுதி தலைவர் சதாசிவம் காளிமுத்து கூறினார்.
அம்பாங் ம.இ.கா தொகுதி சார்பில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய செயலவை உறுப்பினர் என்ற நிலையில் இன்னும் வேகமாகவும் விவேகமாகவும் செயல்படுவதற்கு ஏதுவாக தம்மை மீண்டும் மத்திய செயலவைக்கு தேர்வு செய்வதன் மூலம் தம்மால் சிறப்பாக செயல்பட முடியும் என்று சதாசிவம் தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ம.இ.காவில் ஒரு சாதாரண இளைஞர் உறுப்பினராக இணைந்த சதாசிவம், தொகுதி இளைஞர் பகுதியில் பதவிகளை வகித்து மாநில அளவில் செயல்பட்டு தற்போது மீண்டும் மத்திய செயலவை போட்டியிடும் சதாசிவம் நல்ல சேவையாளர் ஆவார்.
கல்வி, மருத்துவம் என்று உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு உதவிகள் வழங்கியிருக்கிறார். அம்பாங் தொகுதி மக்களுக்கு மட்டுமன்றி பொதுவில் கல்வி, மருத்துவ அடிப்படையில் சேவை வழங்கியிருக்கும் சதாசிவம் காளிமுத்துவை மத்திய செயலவைக்கு தேர்வு செய்ய எண் 36க்கு வாக்களிக்கலாம்.



