
ஒரு புதிய அத்தியாயத்திற்காக ஒன்றுபடுவோம் மலேசிய தமிழ் பள்ளிக் கல்வி வளர்ச்சி மற்றும் நலன்புரி சங்கத் தலைவர் ம. வெற்றிவேலன் வேண்டுகோள்
கோலாலம்பூர்,ஜூலை 15-
“எனக்கு 10 இளைஞர்களைக் கொடுங்கள், நான் உலகத்தை மாற்றிக் காட்டுகிறேன்” என்று சொன்ன சுவாமி விவேகானந்தர் வழியில் ஒரு புதிய அத்தியாயத்திற்காக ஒன்றுபடுவோம் என்று
மலேசிய தமிழ் பள்ளிக் கல்வி வளர்ச்சி மற்றும் நலன்புரி சங்கத் தலைவர் ம. வெற்றிவேலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வலிமையான, ஒளிமயமான எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றுபடும் நேரம் இது. நாம் படித்த, ஆற்றல்மிக்க தலைவர்களை இளைஞர்கள் மத்தியில் உருவாக்க பாடுபடுவோம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதிய மலேசிய இந்திய இளைஞர் சமூகத்தை ஒன்றாக உருவாக்க முயல்வோம். பெர்டானா ஸ்காலர் திட்டத்தின் கீழ் பல தகுதியான இளம் தலைவர்கள் எங்களிடம் உள்ளனர்.
அவர்கள் இயக்கத்தை வழிநடத்த தயாராக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
மலேசிய இந்திய இந்தியர்களுக்காக இந்தப் புதிய இளைஞர் சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் எங்களுடன் இணைய வேண்டும். நாம் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார்.



