Malaysia

இளம் மனங்களுக்கு வலிமை தரும் பயிற்சி நெறி புகைப்படக்கலை, ட்ரோன் காணொளி காட்சியமைப்பு அடிப்படை பயிற்சி கோல்டன் எம்பையர் மீடியா நிறுவனம் வழங்கியது

ஆயர் தாவார், ஜன.16-
இந்தியப் பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக அடிப்படை புகைப்படக்கலை மற்றும் ட்ரோன் காணொளி காட்சியமைப்பு பயிற்சி
கோல்டன் எம்பையர் மீடியா மலேசியா, அதன் தலைவர் திரு. மஹேந்திரன் நடராஜா தலைமையில்
வழங்கப்பட்டது.

பேராக், ஆயர் தாவாரில் அமைந்துள்ள கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த பயிற்சியில், 25 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சிகளில் முழுமையாக ஈடுப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியை சிறப்பிக்க கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி யசோதா நாராயணசாமி அவர்களும் மற்றும் மஞ்சோங் மாவட்ட கல்வி இலாகாவின் தகவல்தொடர்பு தொழில்நுட்ப துணை அதிகாரி திருமதி பரிமளா வடிவேலு அவர்களும் வருகை தந்து ஆதரவளித்தனர்.

கோல்டன் எம்பையர் மீடியா மலேசியா நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த முயற்சியானது, மாணவர்களின் சுறுசுறுப்பையும் கற்பனை திறனையும் ஊக்குவிக்க, புகைப்படக் கலை மற்றும் ட்ரோன் காணொளி காட்சியமைப்பு போன்ற நவீன திறன்களை வளர்க்கும் நோக்கில் நடைபெற்றது. இது, மாணவர்களின் எதிர்கால தொழில்முனைப்பு ஆற்றலை உருவாக்குவதற்கான வழிகாட்டல் ஆகும்.

இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க உதவிய அனைவருக்கும்
Golden Empire Media நிறுவனம் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button