
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
பேராக், மே 12-
தெலுக் இந்தான் நகரத்தின் மையப்பகுதயில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள் மிகு முருகன் ஆலயத்தில் சித்ரா பௌணர்மி விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது
சித்திரை நட்சத்திரமும் , முழு நிலவு தோன்றும் ( பௌணர்மியன்று) சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் இந்த சித்திரை பௌர்ணமி விழா ஆண்டு தோறும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது .
திங்கட்கிழமை பொது விடுமுறையானதால் வழக்கத்திற்கு மாறாக ஆயிரகணக்காண பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை புரிந்தனர்.
ஜொகூரில் இருந்து பெர்லீஸ் வரையில் இருந்து இந்த ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் குவிந்திருந்ததுடன் அதிகமான சுற்றுப் பயணிகளையும் வருகை புரிந்தனர்
ஞாயிறு இரவு முதல் திங்கள் வரை ஆலயத்தில் பெரும் திரளான பக்தர்கள் திரண்டு் தங்களின் காணிக்கைகளை செலுத்தினர்.
பக்தர்கள காவடிகள் சுமந்தும் அலகு குத்தியும் , முடி காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை செலுத்தினர்.
இவ்விழாவிற்கு. சுகாதாரம், மனிதவளம், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய சமூக விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் சிறப்பு வருகை புரிந்தார்.
ஆலயத்தில நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலத்துக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆலய விழாக் காலங்களில் விழாவிற்கு வருகை புரியும் தாய்மார்கள் பலரிடம் தாலிக்கொடிகள் மற்றும் தங்கச் சங்கிலிகள் பறிக்கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக கவலைத் தெரிவித்தார்.
கடந்த சித்தியாவானில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் மற்றும் கோப்பெங்கில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஆலய கும்பாபிஷேக விழாவில் மொத்தம் 10 மகளிர்கள தாலிக்கொடி மற்றும் தங்கச் சங்கிலிகளை பறிக்கொடுத்துள்ளனர்.
ஆகவே, இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க விழாக் காலங்களில் ஆலய வளாகங்களில் ரகசிய காமிராக்களை பொறுத்தவேண்டும் என்று ஆலய நிர்வாகங்களை கேட்டுக்கொண்டார்.
மேலும் பேசிய அவர், தெலுக் இந்தானில் கொண்டாட்டபடும் சித்திரா பௌணர்மி விழாவில் அமைக்கப்ட்டுள்ள தற்காலிக கடைகளுக்கு குறைந்த விலையில் வாடகை வசூலை செய்ய பணிக்கபட்டது .
.இதன படி குறைந்த விலையில் வாடகைக்கு விடப்பட்டது , வணிகர்கள் பலர் மகிழ்ச்சியை தந்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் பக்தர்களுக்கும் மேலும் வணிகர்களுக்கும் தேவைகள் வழங்கப்படும் என்று ஆலோசனை சிவநேசன் வழங்கினார்



