Malaysia

தாய் யானையின் கண்ணெதிரே குட்டி யானை இறந்தது மிக கொடூரமான சம்பவம் லோரியோட்டி கவனமாக இருந்திருக்கலாம்

 

கிரிக், மே 12-

பேராக்கில் திங்கட்கிரமை அதிகாலையில், கனரக வாகனத்தால் மோதப்பட்டு கொல்லப்பட்டதாக நம்பப்படும் தனது யானை குட்டி சாலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அந்த தாய் யானை லாரியை தள்ள முயன்ற சம்பவம் பெரும் கவலையை தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி சுப்பாராவ் வேதனையுடன் தெரிவித்தார்.

கிரிக் செல்லும் இச்சாலயில் வன விலங்குகள் அடிக்கடி இரவில் சாலையை தாண்டிச் செல்லும் சம்பவங்கள் நடப்பதுண்டு. இதன் காரணமாக பல வன விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன.

ஆகக் கடைசியாக ஒரு குட்டி யானை வாகனத்தால் கொல்லப்பட்டுள்ளதாக சுப்பராவ் கூறினார்.

அதுவும் தாய் யானையின் கண் எதிரே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லோரியோட்டி நினத்திருந்தால் இச்சம்வத்தை தடுத்திருக்கலாம்.

ஒன்று மெதுவாக வாகனத்தை செகுத்தியிருக்கலாம் அல்லது இரவில் இச்சாலையை பயன் படுத்தாமல் இருந்திருக்கலாம் என்றார் சுப்பாராவ்.

கெரிக்-ஜெலி கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கனரக வாகனங்கள் இச்சாலையை பயன்வடுத்த கூடாது அதுவும் இரவு நேரங்களில்.

தனது குட்டி குழந்தை யானையை பாதுகாக்க தாய் யானை வாகனத்தை தள்ள முயற்சி செய்துள்ளது.

தாய் யானை சம்பவ இடத்தை விட்டு வெளியேற மறுத்து, தனது குட்டியைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளது.

தாய் யானையின் இறந்த குட்டியை அகற்றுவதற்காக, வன விலங்கு துறையினர் விரைவாக தாய் யானையை பாதுகாப்பான பகுதிக்கு விரட்டியுள்ளனர்.

5 வயதுடைய குட்டி யானையின் உடல் பின்னர் அகற்றப்பட்டு, நிலையான நடைமுறைகளின்படி அடக்கம் செய்யப்பட்டும் என வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே கனரக வாகனமோட்டிகள் மிகவும் ஜாக்கிரதையாக வன விலங்குகள் நடமாடும் இடத்தில் மெதுவாக தங்களது வாகனத்தை செலுத்தும்படி சுப்பாராவ் ஆலோசனை கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button