Malaysia

பேராக் மஇகா ஊராட்சி உறுப்பினர்கள் மன்றத்தின் புதிய தலைவராக சுப்பிரமணியம் தேர்வு 

ஈப்போ,மே 12-

பேரா மஇகா ஊராட்சி உறுப்பினர்கள் மன்றத்தின் புதிய தலைவராக அ.சுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஈப்போவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நடைபெற்ற இம்மன்றத்தின் 26 ஆவது பொதுக கூட்டத்தில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.

இம்மன்றத்தின் தலைவராக நீண்ட காலம் பொறுப்பு வகித்து வந்த எம். கிருஷ்ணன் புதியவர்களுக்கும் வழி விட்டு விலகியதைத் தொடர்ந்து புருவாஸ் தொகுதி காங்கிரஸ் தலைவரான அ. சுப்பிரமணியம் புதியத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இம்மன்றத்தின் துணைத் தலைவராக கம்பார் தொகுதி காங்கிரஸ் தலைவரான ஆர். பாலரத்தினம் தேர்வானார்.

இம்மன்றத்தின் செயலவை உறுப்பினர்களாக மார்ட்டின் செபாஸ்டியன் , என். காவிரி, கே.என். ஜெயராமன், ஏ. சிவநேசன், ஆர். மாரிமுத்து, . கே. பரந்தாமன், எம். நடராஜா, பி. செல்வராஜூ, எஸ்.ஆர். அன்பு ஆகியோர் தேர்வு செய்யபட்டனர்.

 

இவர்களில் , மார்ட்டின் செபாஸ்டியனை மன்றத்தின் கௌரவச் செயலாளராகவும், கே.என். ஜெயராமன்

கழகத்தின் உதவிச் செயலாளராகவும்,

ஏ. சிவநேசன், பொருளாளராகவும் தேர்வு செய்யபட்டனர். டி. ராமநாயகம் , பி. தமிழ் செல்வம் ஆகிய இருவரும் கணகாய்வாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

இந்தக் கூட்டத்தில் மாநில ம.இ.கா. முன்னாள் தலைவர் டத்தோ வ. இளங்கோ , ஈம்போ பாராட் தொகுதி காங்கிரஸ் துணைத் தலைவர. டத்தோ தங்கராஜா, பாரிட் தொகுதி காங்கிரஸ் தலைவர் மோகன் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

இந்த ஆண்டுக் கூட்டத்தை பத்துகாஜா தொகுதி காங்கிரஸ் தலைவர் மூக்கன் சிறப்பான முறையில் வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button