Malaysia

கோப்பெங் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது அ.சிவநேசன் கலந்து கொண்டார்

கோப்பெங், மே.12-
கோப்பெங் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடந்தேறிய நிலையில் இவ்விழாவில் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கலந்து கொண்டார்.

இந்த கோப்பெங் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. இந்த ஆலயம் 1903 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்று வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.

இந்த ஆலய திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசு வாயிலாக 3 லட்சம் ரிங்கிட் மானியம் வழங்கி உதவியதாக சிவநேசன் கூறினார்.

இந்த கும்பாபிஷேக நிறைவுவிழாவில் ஆலயத்தலைவர் பழனிச்சாமி பிரமுகர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து சிறப்பித்தார். அவர்களில் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன், கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கா இங், தேஜா சட்டமன்ற உறுப்பினர் சந்திரா இங், கோப்பெங் பி கே ஆர் இந்திய பிரிவு தலைவர் சண்முகம் (பாலு) ஆகியோர் ஆவார்கள். காசோலை வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button