மித்ராவின் 95.4 மில்லியன் நிதி யாருக்கு எந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது? பிரபாகரன் பதில் சொல்வாரா? மக்கள் கேள்வி
தேணம் அதிரடி அலசல் குணாளன் மணியம்
கோலாலம்பூர்,செப்.23-
இந்தியர்களின் உருமாற்ற திட்டத்திற்காக 2024ஆம் ஆண்டு மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் நிதியில் 95.4 மில்லியன் நிதியை கொடுத்து முடித்தமைக்கு முதலில் பாராட்டு தெரிவிக்கிறோம். ஆனால், இந்த நிதி யாருக்கு எந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்த மித்ரா நிதியில் இருந்து 95.4 மில்லியன் நிதி யாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது? எங்களுக்கு தெரிந்தவரையில் பாலர் பள்ளிகள், சிறுநீரக நோயாளிகளுக்கு இந்நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழங்கப்பட்ட நிதியின் மொத்த மதிப்பு 95.4 மில்லியன் வெள்ளியாகும் என்பதால் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் விளக்கமளிக்க வேண்டும் என்று தேசம் ஊடகத்திடம் சில அரசு சாரா இயக்கங்கள் மற்றும் பொது மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த 7 பிப்ரவரி 2024இல் மித்ரா தலைமைத்துவம் கைமாறிய நிலையில் மித்ராவை ஆக்கிரமிக்கும் பதவிபோர் எனக்கு தெரிந்து ஜூன் மாதம் வரையில் நடந்துள்ளது. அதன்பிறகு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தலைவரானார். இந்த குறுகிய காலகட்டத்தில் 95.4 மில்லியன் எப்படி கொடுத்து முடிக்கப்பட்டது என்று பெயர் குறிப்பிட விரும்பாத அரசு சாரா இயக்கத்தை சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்பினார்.
2024ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டதற்கான எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த குறுகிய காலகட்டத்தில் மித்ரா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மித்ரா நிதி யாருக்கு வழங்கப்பட்டது? இந்த மித்ரா நிதியை பெற்றவர்களின் நிறுவன. பட்டியலை வெளியிட முடியுமா என்று பொதுமக்களில் ஒருவரும் கேள்வி எழுப்பியுள்ளார்.



