Malaysia

“ரோமான்ஸ் ஸ்டூடியோ” முடி திருத்தகத் திறப்பு விழா

 

ஜொகூர் பாரு,ஆக.13-
ஜொகூரைச் சேர்ந்த இந்திய இளைஞர்கள், தங்களது சொந்த முனைப்பில் “ரோமான்ஸ் ஸ்டூடியோ” என்ற புதிய முடி திருத்தும் நிலையத்தைத் திறந்து வைத்து, தொழில்முனைவுத் துறையில் தங்களது முதல் படியை எடுத்துவைத்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், யாயசான் சுல்தானா ரொகாயா தலைவர் டத்தோ சுகுமாரன், ஜொகூர் இஸ்தானாவைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள், ஹுவாங் பிங் ஜியான் (பி.ஜெ.கே) (பி.ஜெ.எம்) மாஸ்ட்ர் பின் செச்ங் செங் காப்டன் பெர்சேகுடு (பி.எ) டத்தோ ஐ.எஸ். டாக்டர் மேன்சன் லிம் புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர்கள், இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை உருவாக்கும் நல்ல பாதையில் முன்னேற வேண்டும் எனவும், சமுதாயத்திற்கு நல்ல பெயர் கொண்டுவரும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் எனவும் ஊக்கமளித்தனர்.

இவ்விழா மகிழ்ச்சிகரமான சூழலில் நடைபெற்றது மற்றும் புதிய நிலையத்திற்கு உள்ளூர் மக்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்கக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button