
புந்தோங் ஸ்ரீ நவஜோதி உணவகத்தின் பொங்கல் விழா கொண்டாட்டம்
ஈப்போ, ஜன.15-
புந்தோங் வட்டாரத்தில் மிகவும் பிரசித்து பெற்ற ஸ்ரீ நவஜோதி உணவகம் அனைவருக்கும் தங்களின் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டது. கடந்த 20 வருடங்களாக இந்த உணவக வியாபாரத்தை செய்து வருவதாகவும், இன்று முதல் சிறப்பாக செயல்பட ஆதரவு வழங்கி வரும் அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார் இவ்வுணவகத்தின் நிறுவனரும், உரிமையாளருமாகிய இராமலிங்கம் பிச்சையா.
தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழாவான பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். இவ்விழாவின் வாயிலாக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய பெரும் வாய்ப்பாக இவ்விழா அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

எங்கள் உணவகத்தின் முன்வாசலில் பொங்கலிட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் மகிழ்ச்சிகரமாக பொங்கலை கொண்டாடியதாக அவர் தெரிவித்தார்.
சூரிய பகவானுக்கும் உழவர்களுக்கும் நன்றி கூறும் வகையில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த 2025 ம் புத்தாண்டு அனைவருக்கும் நன்மையாகவே அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த உணவகத்தின் வாடிக்கையாளரும், உணவக உரிமையாளரின் நெருங்கிய நண்பருமான முனைவர் சேகர் நாராயணன்.
பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற கோட்டபாட்டிற்கு ஏற்ப இனிவரும் காலங்களில் புதிய விவகாரம் மற்றும் தகவலுக்கு முன்னுரிமை வழங்குவோம். இதன் வாயிலாக ஸ்ரீ நவஜோதி உணவகத்தின் சார்பில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் அவர் தெரிவித்துக் கொண்டார்.



